அடைப்பான் நோய் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!

அடைப்பான் நோய் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!

Cock disease - symptoms and preventive methods...!


அடைப்பான் நோய் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!

Mr Animal Care

நோய்க்கான காரணங்கள் :

◆ இந்நோய் பாக்டீரியா கிருமியால் மாடுகளுக்கு ஏற்படும் நோயாகும். மாடுகளை மட்டுமல்லாமல், மனிதர்களையும் தாக்கும் தன்மையுடையது. 

 ◆ நம் நாட்டில் எல்லா இடங்களிலும் குறிப்பாக வெப்பம் மிகுந்த, ஈரக் கசிவுள்ள, காற்றோட்ட வசதியுள்ள இடங்களிலும் இந்நோய் அதிகம் காணப்படுகிறது.

◆ இந்நோய்க் கிருமிகள் உடலிலிருந்து வெளியேறியவுடன் காற்றுடன் சேர்ந்து விரைவில் அழிக்க முடியாத ஸ்போர்களாக மாறி விடுகின்றன. 

◆ கிருமிகள் தன் வெளிப்புறமாகக் கெட்டியான கவசத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன. கிருமி நாசினிகள் எளிதில் இக்கவசத்தினுள் சென்று நுண்கிருமிகளை அழிக்க முடியாது. 

◆ இத்தகைய ஸ்போர்கள் நிலத்தில் தங்கி அவ்வப்போது மாடுகளைத் தாக்கி, பெருத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. 

◆ மேலும் தண்ணீரில் கலந்து நீண்ட தூரம் எடுத்துச் செல்லப்பட்டு பிற மாடுகளுக்கும் நோயை ஏற்படுத்துகின்றன.


நோயின் அறிகுறிகள் :

◆ இந்நோயால் திடீரென்று வலிப்பு ஏற்பட்டு மாடுகள் இறந்து விடும். 

◆இறந்தவுடன் மூக்கு, வாய் போன்றவற்றிலிருந்து கருமை நிறமான இரத்தம் வெளியேறும்.

◆ காய்ச்சல் அதிக அளவு, அதாவது 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

◆ மாடுகளில் உணர்வு இழப்பு ஏற்பட்டு பிறகு இறந்து விடும்.


தடுப்பும், பாதுகாப்பும் :

◆ நோயுள்ள பகுதிகளில் நோய் ஏற்படும் காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக மாடுகளுக்கு அடைப்பான் தடுப்பு+சி போட வேண்டும். நோயில்லாப் பகுதிகளில் தடுப்பூசி தேவை இல்லை.

◆ இந்நோயால் இறக்கும் முன்பு மாடுகளுக்கு இரத்தப் பரிசோதனை செய்து நோய் இருப்பதை உறுதி செய்த பின்பு சுகாதார முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும். 

◆ இதற்குப் பின்பு மாட்டின் தோலை உரிக்கவோ அல்லது இறப்பரிசோதனை செய்யவோ கூடாது. 

◆ காரணம் இக்கிருமிகளை கட்டுப்படுத்துவது கடினம். 

◆ எனவே மாட்டை ஆழமான குழியில் புதைத்தோ அல்லது எரித்தோ அப்புறப்படுத்த வேண்டும்.

◆இரத்தக்கசிவுடன் உள்ள பொருட்கள் அனைத்தையும் எரித்துவிட வேண்டும். அந்த இடத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.


Comments

Popular posts from this blog

கறவை மாடுகளுக்கான மூலிகை சிகிச்சை | Herbal treatment for dairy cows !!

மாட்டு வயிறு உப்புசம் - அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்..!!!

சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறை !!